connections banner

connections / August 14, 2012

இணைப்புக்கள் | Connections – August 14, 2012

 

எல்.எல்.ஆர்.சி நடைமுறைக்கு வருமா?

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. எல்.எல்.ஆர்.சியின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வருகின்ற தேசிய செயற்திட்டம் குறித்து இதன் போது விளக்கமளிக்கப்பட்டது. மேலும் சிவில் சமூக அமைப்புக்களும் இவ்வறிக்கை பற்றி விளக்கமளிக்கும் பல்வேறு செயலமர்வுகளை நடத்தி வருகின்றனர்.

வீதியையும் சமூகங்களையும் மீளக்கட்டியமைக்கும் ஒரு முயற்சி

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவிலுள்ள பெரியபுல்லுமலையூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரே ஒரு சிங்கள கிராமமான மங்களாகமைக்கு செல்வதற்கான 9 கிலோமீற்றர் நீளமான பாதையை USAID அமைப்பின் அனுசரனையுடன் சர்வோதயம் அமைப்பு புனரமைத்து வருகின்றது.  தமது அனைத்து அரச நிர்வாக மற்றும் ஏனைய தேவைகளுக்காக மட்டக்களப்பு நகருக்கு செல்ல வேண்டியுள்ள மங்களாகமை மக்களுக்கு இப்பாதை புனரமைக்கப்படுவதன்  ஊடாக 32 கிலோமீற்றர் பயணிக்க வேண்டிய பயணதூரம் குறைவடைகின்றது. மேலும் இப்பாதையை அமைக்கும் பணியினை பெரியபுல்லுமலை தழிழ் மக்களும் மங்களாகமை சிங்கள மக்களும் இணைந்து மேற்கொள்கினறமை குறிப்பிடத்தக்கதாகும்.

“இனி அவன்” – திரைப்படம்

இலங்கையின் பல்வேறு இன மத கலாச்சார மற்றும் சமூக யதார்த்தம் பற்றி பல்வேறு படைப்புக்களை வெளிப்படுத்திய பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அசோக ஹந்தகம இன்றைய வடக்கின் மற்றுமொரு சமூகப் பிரச்சினையை மக்களிடம் சமர்ப்பிக்க மேற்கொண்ட முயற்சியே இனி அவன்.

Discussion Guidelines