connections / August 28, 2012
இணைப்புக்கள் | Connections – August 28, 2012
மொழி என்பது எமது உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல மக்களிடையேயான உறவுகளையும் மேம்படுத்த வழிவகுக்கின்றது. இலங்கை நாட்டினை பொறுத்தளவில் 30 வருட யுத்தம் முடிவடைந்து நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மொழியென்பதன் தேவை இன்றியமையாததாகும். இன்று நாட்டின் பல பாகங்களிலும் காணப்படுகின்ற பதாதைகளில் மும்மொழிகளின் பங்களிப்பினை காணக்கூடியதாகவுள்ளது.
நேர்காணல் – சி. மோகன்
இன்றைய நல்லிணக்க சூழலில் அமுல்படுத்தப்படுகின்ற மும்மொழிக் கொள்கைகள் பற்றியும் அதற்காக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றியும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளராக பணியாற்றும் கலாநிதி. சி.மோகன்.
கருத்துப்பரிமாற்றத்தில் முச்சக்கரவண்டிகள்
ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தோன்றும் எண்ணங்களே கருத்துக்களாக வெளியாகின்றன. ஆதிகாலத்திலிருந்தே உலகத்தில் எந்த இடத்திலும் ஏனையவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கருத்து வெளியிடுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருந்து வருகின்றது. எனினும் சில சந்தர்ப்பங்களில் அவை நசுக்கப்பட்டன. ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த பல்வேறு வழிகளைப் பயன்டுத்துகின்றனர். இன்று இலங்கையில் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய ஊடகமாக முச்சக்கர வண்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
மறுக்கப்பட்டுகின்ற ஊடக சுதந்திரம்
தகவல்களை வெளியிடும் போது பல்வேறு தரப்புக்களில் இருந்தும் வரும் எதிர்ப்பு ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய விடயம் அல்ல. அரச நிறுவனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடும் ஊடகவியலாளர் மீது சில கருத்துக்களை வெளியிடுவதற்கு அதிகாரிகள் மற்றும் பொறுப்புதாரிகள் அச்சமின்றி முன்வரும் சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் புத்தள மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அண்மையில் செய்திகளை வெளியிடுதல் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை தமக்கு மறுக்கப்பட்டது தொடர்பாக அரச நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
