connections banner

connections / July 17, 2012

இணைப்புக்கள் | Connections – July 17, 2012

01. நில அபகரிப்பும் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்களும்

யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வாழ்ந்த ஏராளமான பிரதேசங்கள் இராணுவ முகாம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக உள்வாங்கப்பட்டது. இப்பிரதேசங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டதோடு இன்றுவரை அகதிகளாக வாழ்கின்றனர். யுத்தத்தின் பின்னரும் ஏராளமான மக்களுக்கு தமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படாமைக்கு எதிராக அரசியற்கட்சிகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொன்டு வருகின்றன. நில அபகரிப்பு மற்றும் காணிப் பிரச்சினை இன்று நாடு முழுவதும் காணப்படுகின்ற ஒரு பிரச்சினையாகவே ஆய்வாளர்கள் தெறிவிக்கின்றனர்.

02.    சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான சர்வதேச தினம்
சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான சர்வதேச தினமான ஜூன் 26 ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால்  “புனர்வாழ்வு பணிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்

களின் உரிமை” என்ற கருப்பொருளில் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சட்டங்கள் பற்றியும் கொடூர சித்திரவதைகளது பாரதூரங்கள் குறித்தும் விளக்கமளிக்கும் மற்றுமொரு நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.

03.    நேர்காணல் – ந. சரவணன் (நோர்வே)
எழுத்தாளரும் தேசியம், தலித்தியம், பெண்ணியம் மற்றும் மாக்ஸியம் தொடர்பாக நீண்ட காலமாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதுபவருமான புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்து வரும் நடராசா சரவணன் “இலங்கையின் சமூகக் கட்டமைப்பில் தலித்தியத்தின் ஆதிக்கம்” குறித்து கலந்துரையாடும் நேர்காணல்

Discussion Guidelines