connections banner

connections / July 31, 2012

இணைப்புக்கள் | Connections – July 31, 2012

புகலிடம் தேடி பயணிக்கும் மக்கள்

பொருளாதாரப் பிரச்சினைகளால் பிற நாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்கின்றமை இன்று மிக முக்கியமான  பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது.  சுமார் 1850 மைல்களை கடல் வழியாக ஆபத்துக்கு மத்தியில் கடந்து செல்கின்ற இம்மக்கள் தஞ்சம் கோரும் நாடுகளில் தமக்கு அபயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே பயணிக்கின்றனர். எனினும் இதன் உண்மை நிலை என்ன? இவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் என்ன?

 

கறுப்பு ஜூலை நிணைவுக் கண்காட்சி

1983ஆம் ஆண்டு தமிழர்களை பெறும் பாதிப்புக்குள்ளாக்கிய கறுப்பு ஜுலையின் பதிவுகள் மறக்கடிக்கப்படாமல் பாதுகாக்கும் நோக்கில் இலங்கையின் பிரபல ஓவியக்கலைஞரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சந்திரகுப்த தேநுவரவினால் நடத்தப்பட்ட “நினைவுச் சின்னங்களும் ஏனைய சிருஷ்டிகளும்.” என்ற தலைப்பிலான கண்காட்சி கடந்த ஜூலை 23ம் திகதி நடத்தப்பட்டது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு அடித்தளமிட்ட இக்கலவரத்தின் பாதிப்புக்களை நினைவு கூறும் வகையில் கடந்த 1997ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் இக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

நேர்காணல் – என். ஜீவேந்திரன்

அரசியல் நெருக்கடிகளாலும் தமது பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும் பலரும் இன்று புகலிட தஞ்சம் கோரி பயணங்களை மேற்கொள்கின்றனர்.  இவ்வாறான பயணங்களின்  போதும் வேறு நாடுகளில் தஞ்சமடைந்ததன் பின்னரும் இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் ஊடகவியலாளராக பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட அழுத்தங்களினால் புலம்பெயர வேண்டியேற்பட்ட அனுபவங்கள் பற்றியும் சுவிஸிலிருந்து எம்மோடு பகிர்ந்து கொள்கிறார் எம். ஜீவேந்திரன்.

 

Discussion Guidelines