connections / October 9, 2012
இணைப்புக்கள் | Connections – October 9, 2012
“இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்” – திரைப்படம்
இறைத்தூதர் முஹம்மத் நபியை அவமதிக்கும் விதத்தில் வெளியிடப்பட்ட திரைப்படமான “இனசன்ஸ் ஒப் முஸ்லீம்ஸ்” என்ற திரைப்படத்திற்கு எதிராக இலங்கையிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. உலகின் ஏனைய பகுதிகளைப் போன்றே இலங்கையிலும் ஓரளவு பதற்றத்தினை இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றையும் 30 இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தது.
சுதந்திர கல்விக்கான உன்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 வீதத்தினை ஒதுக்க வேண்டியும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை உயர்த்தவும் கோரி நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் உள்ளமை தொடர்பாக எதிர்ப்பு பேரணிகள் தொடர்ந்துகொன்டே இருக்கின்றன.
யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வடபகுதிக்கு மின் விநியோகம் மிக முக்கியமாகும். இதனை கருத்திற்கொண்டு கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆந் திகதி கிளிநொச்சியில் உப மின்நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உப மின்நிலையம் வடபகுதி மக்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு ஒளி கொடுக்கும் என நம்பப்படுகின்றது.
தேசிய சிறுவர் நாடக விழா – 2012
2012 ஆம் ஆண்டிற்கான சிறுவர் தின நிகழ்வுகள் செப்டெம்பர் 8ஆந் திகதி முதல் 21ஆந் திகதி வரை நடைபெற்றது. இவ்வாண்டுக்கான தேசிய சிறுவர் நிகழ்வுகள் இனங்களிடையே ஒற்றுமையையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கானதொரு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
