connections banner

connections / September 25, 2012

இணைப்புக்கள் | Connections – September 25, 2012


58ஆவது பொதுநலவாய மாநாடு
58ஆவது பொதுநலவாய மாநாடு செப்டெம்பர் 7 – 15 வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 54 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், இளைஞர்களது வேலைவாய்ப்பின்மை மற்றும் ஆட்சியில் பால்நிலை சமத்துவம்  தொடர்பில் பாராளுமன்றத்தின் வகிபங்கு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பனை உற்பத்திப் பயிற்சி
வடபகுதிகளில் பரவலாக விளையும் பனையில் இருந்து சிறந்த உற்பத்திகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை பனை அபிவிருத்திச்சபை மேற்கொண்டு வருகின்றது. இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதையும் இத்திட்டம்  இலக்காக கொண்டுள்ளது

புத்துயிர் பெறும் வாகரையின் மரபுரிமைகள்
நாட்டுக்கூத்து, புலிக்கூத்து, வசந்தன், கும்மி, கரகாட்டம் என பாரம்பரிய கலை வடிவங்கள் பலமாக காணப்பட்ட பிரதேசமே வாகரை. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த இக்கலைகள் 30  வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிப்புக்களை சந்தித்தன. எனினும் மீண்டும் இந்த கலைகளை தமது மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இலங்கையும் பிரஜை ஊடக பாவனையும் (நூல் வெளியீடு)
அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பில் திறந்த கருத்தாடலை சமூகத்தில் உருவாக்குவதற்காக சமகால நடைமுறைகளுக்கு அப்பால் இன்று பலரும் பயன்படுத்துகின்ற பிரபலமான நவீன ஊடகமே வலைப்பதிவு. இத்தகைய பிரஜைகள் ஊடகத்தின் அறிமுகமானது இன்று உலகில் புதியதொரு ஊடக கலாசாரத்தினை தோற்றுவித்துள்ளது

Discussion Guidelines