connections | Stories / July 6, 2012
சமாதானத்திற்கான பிரஜைகள் விருது
2011 ஆம் ஆண்டின் சமாதானத்திற்கான பிரஜைகள் விருது சர்வதேச தொடர்புகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கலாநிதி நிமல்கா பெர்ணான்டோவுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவதற்காக கடுமையாக உழைத்த தனி நபர்களை கௌரவிப்பதற்காக தேசிய சமாதான பேரவை 2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான பிரஜைகள் விருதை அறிமுகம் செய்தது. முதலாவது சமாதானத்திற்கான பிரஜைகள் விருது 2011 ஆண்டு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியஜோதி சரவணமுத்துக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
