connections | Stories / July 26, 2012
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் தொழில் பிரச்சினை
அரசாங்கமும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சும் இணைந்து நடத்திய முப்பது தொழிற்பயிற்சிகளில் தமது விருப்பத்தின் பிரகாரம் புனர்வாழ்வு பெற்ற 11022 பேரில் 10940 பேர் இதுவரை சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் சமூகத்தில் நிலவும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகளின் காரணமாக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தொழில் வாய்ப்பை பெறுவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இதனால் அரசாங்கம் நீண்ட காலத்தையும் பாரிய நிதியையும் செலவிட்டு முன்னெடுத்;த இத்திட்டம் வெற்றியளித்துள்ளதா? என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.
