connections | Stories / August 3, 2012
யுத்த நூதனசாலை
மூன்று வருடங்களுக்கு முன் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக யுத்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட யுத்தத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் நீர்முழ்கிக் கப்பல்களின் பாகங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளது ஆயுதபலத்தையும் போர் முறைகளையும் காட்சிப்படுத்துவதனூடாக இலங்கையின் சிவில் யுத்தம் வரலாறாகிவிட்டதை இந்தக்கண்காட்சி வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு யுத்தத்தின் பதிவுகள் ஆவணப்படுத்தகின்றமையானது வரவேற்கதக்கதென்றாலும் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படாமல் உள்ள இம்மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
